இந்தியாவில் பொருளாதார அளவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தமிழ்நாடு, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு வெறும் 2 வருடத்தில் மிகப்பெரிய அளவிலான முதலீட்டை பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்தும், உற்பத்தி துரையிலும் ஈர்த்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடக்கும் நிலையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் செய்ய தமிழ்நாடு அரசு பணியாற்றி வருகிறது.
கடந்த 2 வருட முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய முதலீட்டு திட்டங்களை உறுதி செய்துள்ளதாகவும், இதன் மூலம் பிற மாநிலங்களுக்கான இலக்கை உயர்த்தியுள்ளது என சிஎன்பிசி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெறுமென உற்பத்தி துறையில் முதலீட்டை ஈர்க்காமல் எதிர்கால தேவைக்கான தொழிற்சாலைகளை ஈர்த்துள்ளது. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் கண்ணாடி தயாரிப்பு நிறுவனமான செயின்ட் கோபைன் தமிழ்நாட்டில் இந்தியாவின் முதல் ஜீரோ கார்பன் கண்ணாடி தயாரிப்பு தொழிற்சாலையை அமைத்து அசத்தியுள்ளது.
இந்த தொழிற்சாலை மூலம் சோலாரப் பேன்ல்களுக்கான கண்ணாடிகளையும் தயாரிக்க முடியும். இது மட்டும் அல்லாமல் செயின்ட கோபைன் தனது சர்வதேச வர்த்தகத்திற்கு தேவையான பெரும் பகுதி கண்ணாடியை சென்னை தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்கிறது.
இதேபோல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 98 சதவீத தயாரிப்புகளும் சென்னை தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
இதேபோல் ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ள 20000 கோடி ரூபாய் முதலீட்டின் வாயிலாக எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கிறது.
திமுக ஆட்சியில் மிகப்பெரிய முதலீட்டு திட்டம் என்றால் பெட்ரோனாஸ் நிறுவனத்தின் 4.1 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டில் தூத்துக்குடியில் கிரீன் ஹைட்ரஜென் உற்பத்தி தளத்தை அமைக்கப்பட உள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் சென்னையை தாண்டி மாநிலத்தில் பல பகுதிகளில் தொழிற்துறை பூங்கா அமைப்பது மூலம் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைவது மட்டும் அல்லாமல் 2030க்குள் நிர்ணயம் செய்யப்பட்ட 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை விரைவாக அடைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.