சீசெல்சுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை நீண்டகால முயற்சிகளின் பின்னர் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் வகையில் இன்று (21.06.2023) காலை சீசெல்ஸ் நாட்டின் விக்டோரியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானமொன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.இந்த விமானத்திற்கு ஏர்பஸ் ஏ.320 விமானம் பயன்படுத்தப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையம்
எயார் சீசெல்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இந்த SEY-262 விமானம் சீசெல்ஸ் நாட்டில் இருந்து இன்று அதிகாலை 04.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த விமானத்தில் 110 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் அவர்களை வரவேற்கும் வகையில் விசேட வைபவம் ஒன்று தயார் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.