கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டுமானப் பணிகளை நிறுத்த நேரிட்டுள்ளது
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை நிர்மாணிப்பதற்காக ஜப்பானின் ஜய்க்கா நிறுவனத்தினால் வழங்கப்பட்ட கடனும் இடைநிறுத்தப்பட்டதால் கட்டுமானப் பணிகளை நிறுத்த நேரிட்டுள்ளது.