ஸ்பெஷல் புகைப்படத்தை பகிர்ந்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த திரிஷா

TubeTamil News
0

நடிகர் விஜய் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். 

இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். 



நாளைய தீர்ப்பு, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர், பிரியமுடன், கில்லி, பிகில், மாஸ்டர், வாரிசு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஜய், தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரத்ததான முகாம்கள், இலவச உணவு என பல முன்னெடுப்புகளை செய்தனர். மேலும் போஸ்டர்கள் ஒட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இந்நிலையில், நடிகை திரிஷா, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது சமூக வலைதளத்தில் 'லியோ' படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top