மொஸ்கோவை நோக்கி; செல்வதை கைவிட்டுள்ளதாக வாக்னர் கூலிப்படையி;ன் தலைவர் அறிவித்துள்ளார்.
மொஸ்கோவிற்கு அருகில்( 200 கிலோமீற்றர்) சென்ற பின்னர் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் வாக்னர் இராணுவத்தை கலைக்க முயன்றார்கள் நாங்கள் நீதியை நோக்கிய பயணத்தை மேற்கொண்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
24 மணிநேரத்தில் நாங்கள் மொஸ்கோவிற்கு அருகில் சென்றோம் எங்களின் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை ஆனால் தற்போது இரத்தம் சிந்தப்படக்கூடிய நிலையேற்பட்டது ரஸ்ய இரத்தம் சிந்தப்படலாம் என்பதை உணர்ந்து நாங்கள் எங்கள் இராணுவவாகனங்களை திருப்பிக்கொண்டு முகாம்களிற்கு திரும்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பெலாரஸ் தலையிட்டதை தொடர்ந்தே வாக்னர் கூலிப்படையினர் மொஸ்கோவை நோக்கி செல்வதை கைவிட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளனர்.