நெடுந்தீவு பிரதான வீதி முழுமையாக புனரமைப்பு ஆளுநர் உத்தரவு.

tubetamil
0

 வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் அவர்களுடன் இன்று (30.06.2023) நடைபெற்ற சந்திப்பின்போது யாழ். மாவட்ட அபிவிருத்தி மற்றும் அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் த.ரஜீவ் மற்றும் தீவக அமைப்பாளர்

மா.பரமேஸ்வரன் ஆகியோர் கலந்துரையாடினர்.

 

இதில் பல்வேறு விடயங்களிற்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுநர் இணங்கிக் கொண்டதுடன் நெடுந்தீவில் முழுமை பெறாது இருக்கும் பிரதான வீதிகளை அமைப்பதற்கு உரிய உத்தரவினை வழங்கியதுடன், அரசாங்க உத்தியோகத்தர்களிற்கு தண்டனை இடமாற்றமாக தீவு பகுதிகளிற்கு இடமாற்றம் செய்வதனைத் தடுத்து நிறுத்துவதாகவும் இதன் போது உறுதியளித்தார்.

இதன்போது ஆளுநரின் செயலாளர் ஜே . எக்ஸ் . செல்வநாயகமும் உடனிருந்தார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top