கனடாவில் முதன்முதலில் உயர் பதவிக்கு இலங்கைப் பெண் நியமனம்!

TubeTamil News
0

 இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட துஷாரா வில்லியம்சை, கனடா அரசாங்கத்தின் உள்நாட்டு விவகார பிரதி அமைச்சராக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 19ஆம் திகதி முதல் நியமித்துள்ளார்.

கொழும்பில் பிறந்த துஷாரா வில்லியம்ஸ் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை கொழும்பு மகளிர் கல்லூரியில் கற்றார். அதன் பின்னர் அவர் 1991 இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.

டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம்

கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் மற்றும் உலகளாவிய மேம்பாட்டு ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

அங்கு முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர், துஷாரா இலங்கையில் உள்ள கொள்கை கற்கை நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றி இருந்தார்.

அதேவேளை துஷாரா வில்லியம்ஸ் கனடா அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை வகிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top