இஸ்லாமிய சிறுபான்மையினரை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபடும் அபாயம் உள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா இதனை கூறினார்.
பிரதமர் மோடியுடன் தான் உரையாடியிருந்தால் இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை தாங்கள் பாதுகாக்கவில்லை என்று கூறியிருப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பிரதமருடனான தனது சந்தித்திப்பின் போது வாதத்தின் ஒரு பகுதியாக சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து இருந்திருக்கும் எனக்கூறிய ஓபாமா, இஸ்லாமிய சிறுபான்மையினரை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபட அதிகம் வாய்ப்புள்ளதாக உள்ளதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கும் பைடன் இந்தியாவில் இஸ்லாமிய சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும் என்று ஓபாமா வலியுறுத்தினார்.