யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்து எரிந்து தீக்கிரையாகியுள்ளது.
இச்சம்பவம் மதுரங்குளி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
43 ப
யணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்தே இவ்வாறு எரிந்து தீக்கிரையாகியுள்ளது.
எப்படியிருப்பினும் இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எனினும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.