இலங்கையில் நிலவும் கடன் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை செப்டெம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற ஆண்டு நிறைவு விழாவின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் (IDU) 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜூன் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் லண்டனில் நடைபெற்ற சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் (IDU) வருடாந்த மன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.
கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.