இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடனை மீள செலுத்த 12 வருட அவகாசத்தை வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
அதன்படி, மறுசீரமைப்பு தொகுப்பு வந்தவுடன் மூன்று தொடக்கம் நான்கு வருடங்களுக்குள் செலுத்த வேண்டிய கடனை 10 தொடக்கம் 12 வருடங்களுக்குள் செலுத்த அவகாசம் வழங்கப்படும் என இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தின் தலைவர் எம். செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை எதிர்நோக்கும் நிதி நெருக்கடியை தணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி இந்திய ஏற்றுமதியாளர்களையும் பாதித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.