கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனம் கல்வி அமைச்சர் வழங்கிய அனுமதி..!!

tubetamil
0 minute read
0

 கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று (24.07.2023) கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கல்வி அமைச்சர் இடையில் இடம்பெற்றுள்ளது.


கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கடந்த சில மாதங்களாக செந்தில் தொண்டமானால் கல்வி அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் அடிப்படையில் அமைச்சர் கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த உதவும் பாடம் சார்ந்த 700 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு தேவையான அனுமதிகளை ஆளுநருக்கு வழங்கியுள்ளார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தெரிவு செய்யப்படாத உயர் தேசிய ஆங்கில டிப்ளோமாதாரிகளின் நியமனம் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top