போராட்டத்தின்போது
சுகவீனமுற்ற தாயாருக்கு நீர் பருக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்..!! கிளிநொச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்
ககாணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் (OMP) மேற்கொள்ளப்படும் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் காலை கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குறித்த போராட்டத்தில் திடீரென சுகவீனமுற்ற தாயாருக்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் நீர் பருக்கிய சம்பவம் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உதவி பொலிஸ் பரிசோதகரான பெண் உத்தியோகத்தரே போராட்டத்தில் சுகவீனமுற்ற குறித்த தாயாருக்கு குடிநீர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.