தற்போது அமைச்சர்கள் வகித்து வரும் துறைகளிலும் மாற்றங்களை செய்ய தேவையில்லை எனவும் ஜனாதிபதி அமைச்சர்களிடஅமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எவ்வித நோக்கமும் ஜனாதிபதிக்கு கிடையாது என அரசாங்கத்தின் உயர் மட்ட தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் அங்கம் வகித்து வருகின்றனர்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவது குறித்து அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியிடம் வினவியுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக பல்வேறு தரப்பில் பிரசாரங்கள் செய்யப்படுவதாகவும் புதிதாக அமைச்சு பதவிகளை வழங்கும் எவ்விதமான தேவையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.மேலும் தற்போது அமைச்சர்கள் வகித்து வரும் துறைகளிலும் மாற்றங்களை செய்ய தேவையில்லை எனவும் ஜனாதிபதி அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும் என அந்த கட்சி ஜனாதிபதியிடம் பல முறை கோரிக்கைகளை விடுத்துள்ளது.
அமைச்சு பதவிகள் வழங்கப்படாத காரணத்தினால், பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர்களை திருப்திப்படுத்துவதற்காக மாகாண அமைச்சர் பதவிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தன..