லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ.
திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், பிரியா ஆனந்த், கவுதம் மேனன், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கேரளா தியேட்டர் உரிமையை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு தமிழில் இருந்து அதிக விலைக்கு 2.0 படம் ரூ. 14 கோடிக்கு கேரளாவில் வியாபாரம் ஆனது.
இப்போது லியோ படத்தின் கேரள உரிமை ரூ. 16 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.