இரத்தின கற்களை சட்டவிரோதமாக சென்னைக்கு கடத்தி செல்ல முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 29கோடி 10 இலட்ச ரூபாவுக்கும் அதிக பெறுமதியான இரத்தின கற்களையே கடத்த முயன்றுள்ளார் என சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் வெளியேறும் முனையத்தில் வைத்து 2 கிலோகிராம் 311 கிராம் நிறையுடைய இரத்தினக்கற்கள் அவர் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு கைதானவர், ஒருகொடவத்த பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என்பதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.