வடமாகாண கராத்தே போட்டியில் வவுனியாவிற்கு 4 பதக்கங்கள்..

tubetamil
0

 வடமாகாண ரீதியில் நடைபெற்ற பாடசாலை மட்டங்களுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டியில் வவுனியாவிற்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

வடமாகாண ரீதியில் 2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட கராத்தே சுற்றுப் போட்டி,  11, 12 ஆம் திகதிகளில் நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்றுள்ளது.

நடைபெற்ற இப்போட்டியில் நிப்பான் கராத்தே சங்கத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் 4 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய பாடசாலைக்கும், கழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற சாதனையாளர்கள்



வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு ஆசிரியர்களான ஜே.டி.ரெஜினோட்டும், ஞா.ஞானகீதனும் பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top