தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரிலுள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஜோகன்னஸ்பர்க் நகரிலுள்ள ஐந்து மாடி கட்டடம் ஒன்றில் இன்று வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அத்தோடு சில நிமிடங்களிலேயே தீ கட்டடம் முழுவதும் பரவியதால், உள்ளே இருந்தவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. அத்தோடு இந்த தீ விபத்தில் 73 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
நகரத்தின் மையத்தில் இருக்கும் விபத்து நடந்த மார்ஷல் டவுன் பகுதி, பராமரிக்கப்படாத பழைய கட்டங்கள் நிறைந்துள்ள பகுதி என்று சொல்லப்படுகின்றது..
அத்தோடு ஆபிரிக்க நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறும் மக்கள் இத்தகைய கட்டடங்களில் தங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. இதனால், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 1.30 மணியவில் தீ பரவியுள்ளதுடன், அந்நேரத்தில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாலும், குறித்த கட்டடத்தின் வடிவமைப்பினாலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் , தீ பரவியமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.