இரண்டு உலங்கு வாநூர்திகளில் இருந்த 6 யுக்ரைனிய படையினர், கிழக்கு யுக்ரைனில் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.
அதாவது குறித்த அறுவரும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிலுள்ள கிழக்கு யுக்ரைன் நகரமான பாக்முட்டில் பணியாற்றியதாக யுக்ரைன் இராணுவத்தின் டெலிகிராம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
டொனெட்ஸ்க் - பாக்முட்டின் பகுதியில், ரஷ்யா – யுக்ரைன் போரின் முக்கிய இடமாக கருதப்படுகிறது.
அத்தோடு இரண்டு உலங்கு வாநூர்திகளும் அழிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இருந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறுஇருக்கையில், இன்று மத்திய நகரமான பொல்டாவாவில் யுக்ரைனின் ஆண்களுக்கான விசேட சேவை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்இ பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் அடையாளங்கள் பகிரங்கப்படுத்தப்படமாட்டாது எனவும் யுக்ரைனிய தகவல்கள் தெரிவிக்கின்றன.