கண்டி மற்றும் மாத்தளை நகரங்களுக்கு இடையிலான தொடருந்து சேவை இடைநிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதையில் மூன்று தினங்களுக்கு தொடருந்து இயக்கப்படாது என இன்றைய தினம் (10.08.2023) தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
திருத்த பணி
திருத்த பணிகளை மேற்கொள்வதற்காக இவ்வாறு தொடருந்து பாதை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு முதல் 21ஆம் திகதி பிற்பகல் நான்கு மணி வரையில் தொடருந்து பாதை மூடப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.