இராணுவத்தின் பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் இடித்து உடைக்கப்பட்ட கம்பி வேலிகள்....

tubetamil
0

 மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பகுதியில் அரச காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டிய கம்பி வேலிகள் மாகாவலி அதிகார சபையினர் இடித்துள்ளனர்.

மாகாவலி அதிகார சபையினர், பலத்து இராணுவ பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று(11.08.2023) புல்டோசர் கொண்டு கம்பி வேலிகள் இடித்து தள்ளியதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை கொழும்பு வீதியிலுள்ள நாவலடி தொடக்கம் ஜெயந்தியாலை பிரதேசம் வரையிலான தொடருந்து தண்டவாளத்துக்கும் வீதிக்கும் இடையிலான 28 ஏக்கர் அரச காணிகளை நாவலடி ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த காணி அபகரிப்பாளர் சிலர் உள்நுழைந்து காட்டு மரங்களை வெட்டி சட்டவிரோதமாக அபகரித்து அதற்கு முள் கம்பி வேலிகள் நாட்டி கட்டடங்கள் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளன

சட்டவிரோத காணி அபகரிப்பு 





இதனையடுத்து இந்த சட்டவிரோத காணி அபகரிப்பு பேசும் பொருளாக மாறிய நிலையில் நேற்ற முன்தினம் வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் சென்று காணி அபகரிப்பில் ஈடுபடுபவர்களிடம் இது அரச காணி இந்த காணிகளுக்கு அமைக்கப்பட்ட கம்பி வேலிகளை அகற்றிக் கொண்டு உடனடியாக வெளியேற வேண்டும் என கூறியுள்ளனர்.

அவ்வாறு இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவைகளை அகற்றிச் செல்வதற்கு 2 நாள் அவகாசம் தருவதாகவும் கூறியுள்ளனர்.

.இந்த நிலையில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான இந்த காணிகளை அபகரித்துள்ளமையையடுத்து சம்பவதினமான இன்று மகாவலி அதிகாரசபை பொலிஸார் மற்றும் இராணவ பாதுகாப்புடன் அத்துமீறி அபகரித்து முள் கம்பி வேலி அமைத்து மற்றும் கட்டிய கட்டடங்கள் புல்டோசர் கொண்டு இடித்து தள்ளி அவைகளை அகற்றியுள்ளனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top