பட்டுச்சேலையில் ரோபோ சங்கரின் மகள்! கல்யாணம் எப்போ? வைரலாகும் புகைப்படம்

tubetamil
1 minute read
0

 திருமணம் குறித்து அறிவிப்பைக் கொடுத்து விட்டு அதுகுறித்து எந்த தகவலும் வெளியிடாமல் இருந்த ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தற்போது பல அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ரோபோ சங்கர்

நகைச்சுவை நடிகராக பிரபலமான ரோபோ சங்கர் முதலில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.

ரோபோ சங்கரின் மகள் இப்போ எப்படி அழகா மாறிட்டாங்க

அதன் பின் கலக்கபோவது யாரு, அசத்தப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி அசத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதற்குப் பின்னர் தான் சினிமாவிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அடுத்தடுத்து வாய்ப்புகள் வர பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். இவர் பிரியங்கா என்பவரை திருமணம் செய்து இந்திரஜா என்ற மகளும் இருக்கிறார்.

ரோபோ சங்கரின் மகள்

ரோபோ சங்கரின் மகள் இப்போ எப்படி அழகா மாறிட்டாங்க

ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் விருமன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

பிறகு படவாய்ப்புகள் இல்லாமல் போக குடும்பத்துடன் பல வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பிரபலமானார்கள். மேலும், இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்திருந்தார்கள். ஆனால் திருமண திகதி குறித்து வெளியிடவில்லை.

இந்நிலையில், அவர் தற்போது ணகோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்தவர்கள் இவர் சொல்லாமல் திருமணம் செய்துக் கொண்டாரா என்று கேட்டு வருகிறார்கள்.     

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top