நாடளாவிய ரீதியில் நிலவும் வறட்சி காரணமாக நீர் நிலைகள் மாசடைவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி பேதி போன்ற நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
காய்ச்சிய நீரை பருகுவதன் மூலம் இந்நோய்களை தவிர்க்க முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சுகாதார ஆபத்து
"இந்த வறண்ட பருவத்தில், சாதாரண நீர் நிலைகள் வறண்டு கிடப்பதால், தண்ணீர் விநியோகம் மக்களுக்கு கடுமையான பிரச்சினையாக உள்ளது.
குறிப்பாக கிராமப் பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்லும் போது இந்த நிலை தீவிரமான சூழ்நிலையாக மாறி வருகிறது.
கிணறுகள், ஆழ் குழாய் கிணறுகள் போன்றவை வறண்டு கிடப்பதால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால் கிடைக்கும் நீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீரை பெற முயற்சிக்கின்றனர். அந்த நீர் ஆதாரங்களில் சில அசுத்தங்கள் மற்றும் கிருமிகள் இருக்க வாய்ப்பு உள்ளது.
எனவே மக்கள் இந்த நீர் ஆதாரங்களில் இருந்து வரும் நீரை எதிர்காலத்தில் பயன்படுத்தும் போது வயிற்றுப்போக்கு, வாந்திபேதி போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது.