காதலனை அவுஸ்திரேலியா அனுப்ப கிளிநொச்சி காதலி செய்த செயல்!

tubetamil
1 minute read
0

 கிளிநொச்சியை சேர்ந்த பெண் ஒருவர் காதலனை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் வசிக்கும் பெண் ஒருவரே யாழ்ப்பாணம் மானிப்பாயில் வசிக்கும் இளைஞரிடம் இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வசிக்கும் தனது காதலியை பார்ப்பதற்காக அவ் இளைஞர் வருகை தரும் சந்தர்ப்பங்களில் தனது உறவினர் ஒருவர் அவுஸ்திரேலியாவிலிருந்து தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார் என தெரிவித்து உரையாட செய்துள்ளார்.

நீண்ட நாட்கள் இவ்வாறு உரையாடியதன் பின்னர் காதலனை அவுஸ்திரேலியாவிற்கு அழைப்பித்துக்கொள்ள முடியும் என தொலைபேசியில் உரையாடியவர் தெரிவித்துள்ளார்.




யுவதியிடம் பணத்தை கொடுத்த காதலன்

இதற்கமைய 18 இலட்சம் ரூபாய் பணத்தை யுவதியிடம் காதலன் கொடுத்துள்ளார்.


பணத்தை பெற்றுக்கொண்ட தினத்திலிருந்து யுவதியின் நடத்தையில் மாற்றங்கள் ஆரம்பித்ததாகவும் அதன் பின்னர் காதல் தொடர்பும் துண்டித்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே காதலன் காவல் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள யுவதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top