முல்லைத்தீவில் அதிபரின் செயலால் வெடித்த சர்ச்சை!

tubetamil
0 minute read
0

 முல்லைத்தீவில் அதிபரின் மகனின் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக மாணவர்களை நேரத்துடன் வீட்டுக்கு அனுப்பிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு வெலிஓயாவிலுள்ள பாடசாலையொன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் தொண்டர் ஆசிரியராகப் பணிபுரியும் அதிபரின் மகனின் திருமணம் 10ஆம் திகதி நடைபெற்ற நிலையில் மணமகளும் அதே பாடசாலையில் தொண்டர் ஆசிரியையாக இருப்பதாக தெரிய வைத்துள்ளது.

முல்லைத்தீவில் அதிபரின் செயலால் வெடித்த சர்ச்சை! | Students Home Principal Son Wedding In Mullaithivi

வெளியேறிய மாணவர்கள்

ஆரம்பப் பிள்ளைகள் முற்பகல் 10.30க்கும் மேலும் வகுப்பு பிள்ளைகள் முற்பகல் 11.00 மணிக்கும் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பகல் 11.00 மணியளவில் ஆசிரியர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 11ம் வகுப்பு வரை நடைபெறும் இப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி கற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அங்கு சுமார் 20 பேர் ஆசிரியர்களாக பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top