பல்லாயிரக்கணக்கான கட்டுமான வேலை வாய்ப்புகள்… பற்றாக்குறையால் திண்டாடும் கனடா

tubetamil
0

கனடாவில் தொழில் தகுதி கொண்ட புலம்பெயர் மக்களுக்கு அதிக குடியுரிமை வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தாலும், கட்டுமான வேலை வாய்ப்புகளை இழந்து வருவதாகவே ஆய்வில் தெரிய வந்துள்ளது.

45,000 வேலை வாய்ப்புகள்

கனடாவில் ஜூலை மாதத்தில் மட்டும் கட்டுமான தொழிலில் 45,000 வேலை வாய்ப்புகள் நிரப்பப்படாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது கடந்த மாதத்தில் இருந்து 2.8 சதவீத சரிவு என்றே கூறப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான கட்டுமான வேலை வாய்ப்புகள்... பற்றாக்குறையால் திண்டாடும் கனடா | Tens Of Thousands Of Constructions Jobs

மேலும், ஜனவரி 2023 முதல், கட்டுமான தொழிலில் வேலைவாய்ப்பு என்பது 71,000 எண்ணிக்கை குறைந்துள்ளது. பொது நிர்வாகம், தகவல், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளை விட கட்டுமானம் அதிக வேலைகளை இழந்துள்ளது.

கட்டுமானத் துறையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் பற்றாக்குறை உள்ளது. மேலும் வரவிருக்கும் ஓய்வு பெறும் அலை இந்த சிக்கலை மேலும் மோசமாக்கும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

புலம்பெயர் மக்களுக்கு முக்கியத்துவம்

தற்போது கட்டுமான வேலைக்கு 80,000 ஊழியர்களின் தேவை ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவே, கட்டுமானம் கால தாமதம் ஏற்படுவதாகவும், செலவும் அதிகரிப்பதாக நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர்.

ஒன்ராறியோ பிராந்தியத்தில் மட்டும் கட்டுமான வேலைக்கு 100,000 பேர்கள் தேவை என கூறுகின்றனர். இதனாலையே தொழில் அனுபவம் கொண்ட புலம்பெயர் மக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க கனடா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top