உலகெங்கும் வாழும் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை தான் நயன்தாரா.இவர் தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படம் தற்போது இப்படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா 75 மற்றும் டெஸ்ட் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இதன்பின்னர், வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார்.
அவ்வப்போது நயன்தாரா தன்னுடைய மகன்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சோசியல்மீடியாவில் வெளியாகும். அதாவது விக்னேஷ் சிவன் தன்னுடைய சோசியல் மீடியாவில் இருந்து வெளியிடுவார்.
ஆனால், இனிமேல் நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தான் அந்த புகைப்படங்கள் எல்லாம் வெளிவரப்போகிறது. ஆம், நடிகை நயன்தாரா முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார்.
ரஜினியின் ஜெயிலர் படம் பிஜிஎம் போட்டு தனது இரட்டை மகன்களுடன் மாஸ் என்ட்ரி கொடுக்கும் வீடியோவை நயன் தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
மேலும் முதல் முறையாக தன்னுடைய மகன்களின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.
இதோ அந்த வீடியோ
https://www.instagram.com/reel/CwmOAfkvu2M/?utm_source=ig_web_copy_link