செப்டெம்பர் இறுதி வரை இலங்கையில் வரட்சியான காலநிலை!

tubetamil
0

 தென்மேற்கு பருவமழையில் எல் நினோவின் தாக்கம் காரணமாக, செப்டெம்பர் இறுதி வரை இலங்கையில் வரட்சியான காலநிலை நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மே முதல் செப்டெம்பர் வரை, போதுமான மழையை வழங்கத் தவறிவிட்டது. இது சில மாவட்டங்களில் நீடித்த வரட்சிக்கு பங்களித்துள்ளது.

எவ்வாறாயினும், நவம்பரில் எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை, தற்போதைய வானிலை முறைகளால் பாதிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்மட்டம் குறைந்துள்ளதாக அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை பயிர்களுக்கு, குறிப்பாக நெல் போன்ற பிரதான பயிர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

செப்டெம்பர் இறுதி வரை இலங்கையில் வரட்சியான காலநிலை: வளிமண்டலவியல் திணைக்களம் | Dry Weathercontinue Till The End Of September

குறிப்பாக வடமத்திய மாகாணத்தில் உள்ள விவசாயிகள், வடகிழக்கு பருவமழையின் வருகையை எதிர்பார்த்து செப்டெம்பர் மாதத்திற்குள் நடவு செய்வதை பாரம்பரியமாக தொடங்குகின்றனர்.

இதேவேளை முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவாகவே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top