பெண்ணின் மூளைக்குள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட புழு … மருத்துவ வரலாற்றில் முதல் முறை

tubetamil
1 minute read
0

 வயிற்று வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற ஒரு பெண்ணின் மூளையிலிருந்து உயிருடன் புழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் மருத்துவ உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்று வலிக்காக மருத்துவமனை சென்ற பெண்

அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் 64 வயதுடைய பெண்மணி ஒருவர், கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, வறட்டு இருமலும் இரவு நேரங்களில் கடுமையான வியர்வையுமாக, வித்தியாச வித்தியாசமான அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.

பெண்ணின் மூளைக்குள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட புழு... மருத்துவ வரலாற்றில் முதல் முறை | Live Worm Found In Woman Brain

மருத்துவர்கள் ஒவ்வொரு பிரச்சினையாக ஆராய்ந்துகொண்டே வர, 2022இல் கூடுதலாக அவருக்கு மறதியும் மன அழுத்தமும் ஏற்படவே, அவரது மூளையை ஒரு MRI ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிடலாம் என முடிவு செய்துள்ளார்கள் அவர்கள்.

ஸ்கேனில் தெரியவந்த விடயம்

MRI ஸ்கேன் முடிவுகள், அந்தப் பெண்மணியின் மூளையின் முன் பகுதியில் ஏதோ காயம் ஏற்பட்டுள்ளதைக் காண்பிக்க, அறுவை சிகிச்சை செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சையின்போது, சிவப்பு நிறத்தில் ஏதோ நூல் போல இருப்பதை மருத்துவர்கள் கவனிக்க, அது சட்டென அசைந்துள்ளது. அப்போதுதான் அது ஒரு புழு என்பதை மருத்துவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top