வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்........

tubetamil
0

 இலங்கையில் எந்த ஒரு கோவிட் தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்கள் தினசரி கோவிட்டை தடுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான இலத்திரனியல் சான்றிதழ்களை பெற வருகின்றார்கள். அவர்களில் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாகும்.

மேற்கத்திய நாடுகள் பல இன்னமும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களை கேட்பதனால் வெளிநாடு செல்வதில் கடுமையான சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top