ரயில் நிலையத்தில் இளம் தாயிற்கும் மகளுக்கு நேர்ந்த அவமானம்

tubetamil
0 minute read
0

கம்பஹா பகுதியில் உள்ள ரயில் நிலைய முகாமையாளர் மற்றும் பயணச்சீட்டு பரிசோதிக்கும் அதிகாரிக்கு எதிராக பெண் ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இளம் தாயும் அவரது 11 வயது மகளும் கம்பஹா ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர்.

வாசலில் இருந்த ரயில் டிக்கெட் சோதனை அதிகாரி, டிக்கெட்டைக் கேட்டபோது வழங்குவதற்கு சற்று தாமதமாகியுள்ளது. இதனால் பயணிகள் முன்னிலையில் அவமானகரமான முறையில் பகிரங்கமாகத் திட்டியுள்ளார்.

முறைப்பாடு 

இது குறித்து ஸ்டேஷன் மாஸ்டரிடம் முறைப்பாடு செய்ய சென்றபோது, ​​அவரும் தன்னை இதேபோல் பகிரங்கமாக திட்டிவிட்டு, மீண்டும் நிலையத்திற்கு வர கூடாதென மிரட்டியதாக பொலிஸாரிடம் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

ரயில் நிலையத்தில் இளம் தாயிற்கும் மகளுக்கு நேர்ந்த அவமானம் | Gampaha To Colombo Train Police Station

ஸ்டேஷன் மாஸ்டர் தனது கையடக்கத் தொலைபேசியில் தன்னைப் புகைப்படம் எடுத்ததாகவும், சம்பவத்தை தனது கையடக்கத் தொலை பேசியில் வீடியோவாக எடுத்ததாகவும் அந்தப் பெண் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top