யாழ்.பலாலி காவல் நிலையத்தில் பெண் உத்தியோகத்தருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த காவல் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது 26ஆம் தேிகதி இரவு வேளை கணினிப் பிரிவில் கடமையில் இருந்த பெண் காவல் அதிகாரியுடன், போதையில் இருந்த குறித்த பதில் பொறுப்பதிகாரி பாலியல் அங்க சேட்டையில் ஈடுபட்டார் என்று அந்தப் பெண் அதிகாரியால் முறைப்பாடு வழங்கப்பட்டது.
எனினும் இதனை தொடர்ந்து குறித்த பதில் பொறுப்பதிகாரி காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது.
இதேவேளை , குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிக்கு ஒழுக்காற்று விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.