பிரமிட் திட்டங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை மத்திய வங்கி, நாட்டு மக்களுக்கு மீண்டுமொரு அவசர அறிவிப்பை வழங்கியுள்ளது.
பிரமிட் திட்டங்களைச் செயல்படுத்தும் மோசடியாளர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
தண்டனைக்குரிய குற்றம்
பிரபல விளையாட்டுக்கள், மதம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்குவதன் மூலம் சமூகத்தில் இவர்கள் நல்லவர்களாக தோன்றுவதற்கு முயற்சிப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.மேலும், பிரமிட் திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே இதில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
பிரமிட் திட்டங்கள் தொடர்பில் தொடர்ந்தும் மத்திய வங்கி மக்களுக்கு எச்சரிக்கைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.