யாழில் இருந்து பயணிகளுடன் விமான நிலையத்துக்கு சென்ற சொகுசு பேருந்திற்கு நேர்ந்த கதி..!

keerthi
0 minute read
0



யாழில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது என கூறப்படுகின்றது.



நேற்று இரவு எட்டு மணியளவில் யாழில் இருந்து 35 பயணிகளை ஏற்றுக் கொண்டு விமான நிலையம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

இதற்கமைய இன்று அதிகாலை 4.30 மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்டுவ பிரதேசத்தில் வைத்து திடீரென தீ பற்றி கொண்டதாகவும் உடனடியாக பேருந்தில இருந்த பயணிகள் காப்பாற்றப்பட்டதுடன் வேறு வாகனங்களில் அவர்கள் விமான நிலையம் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

இந்த தீ விபத்து காரணமாக பேருந்து முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top