உலகெங்கும் வாழும் தமிழர்களின் தற்போது பேசு பொருளாக அமையும் நிகழ்ச்சி தான் சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 3.
கடந்த வருடங்களில் இருந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு தற்போது இலங்கையில் இருந்து இரண்டு சிறுமிகள் சென்றுள்ளனர்.
அதில் ஒன்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா மற்றது மலையகத்தில் இருந்து சென்ற அசானி.
இவர்களினால் ஜீ தமிழ் டி.ஆர்.பியில் முன்னிலையில் வகிக்கின்றது.அதில் மலையகத்தை சேர்ந்த அசானி குறித்த நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழித்து கலந்து கொண்டு இருந்தார். தனது பாடல்களால் மக்கள் மனதைக் கவர்ந்து வருகின்றார். இவர் பணம் இல்லாமையினால் தான் இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
இவரின் ஏழ்மையைப் புரிந்து கொண்ட டிவி சேனல் இவருக்கு 2வாரங்கள் அந்நிகழ்ச்சியில் பாட வாய்ப்பளித்திருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த 2வாரங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது போட்டியாளர்களில் ஒருவராக அசானியும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்.
மேலும் இந்தப் போட்டியில் அசானி தொடர்ந்து நீடிப்பதற்காக மற்ற குழந்தைகளின் பெற்றோரிடம் நடுவர்கள் அனுமதி கேட்கிறார்கள்.அதன் படி பெங்றோர்களும் சம்மதம் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாது இலங்கைப் பாராளுமன்றத்தில் அசானியின் பெயர் ஒலித்தமையும் அங்கு ஒளிபரப்பு செய்கின்றனர். அதுமட்டுமல்லாது இலங்கை பாராளுமன்றத்தில் கூட அசானியைப் பற்றிப் பேசியிருக்கின்றார்கள் என்பதை நடுவர்கள் அனைவரும் வியக்கின்றனர்.
இந்நிலையில் போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அசானிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.