க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர கூறியுள்ளார்.
பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும், திருத்தும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இம்முறை 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைகளில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு உயர்தர பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பல்கலைக்கழக அனுமதி மற்றும் உயர்கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
பல தடைகளுக்கு மத்தியில் பரீட்சை பெறுபேறுகளை ஆறு மாதங்களுக்குள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.