தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்-வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

keerthi
0



இலங்கை நிலவரப்படி கடந்த வாரத்துடன்  ஒப்பிடும் போது இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 621,155.24 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இது  சிறு வீழ்ச்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு  சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க  அவுன்ஸின் விலை 622,398 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,960 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 175,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை  161,050  ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்தோடு  22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,130 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,220 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 153,750 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

அத்தோடு  ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top