ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பங்கேற்கும் முதலாவது போட்டி இன்று வியாழக்கிழமை பங்களாதேஷ் அணிக்கொிராக பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அத்தோடு போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்தப் போட்டிக்கு புதிய வீரர் தன்சித் ஹசன் தமீமை அழைக்க பங்களாதேஷ் அணி முடிவு செய்துள்ளது.
அத்தோடு அவர் தொடக்க வீரராக களமிறங்கவுள்ளார்.
அதேநேரம் பல்லேகல விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் மழையுடன் கூடிய வானிலையே நிலவுவதாக கூறப்படுகின்றது.