இலங்கையில் மத வழிபாட்டுத்தலங்கள் மற்றும் தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கில் மத ரீதியிலான பிரச்சினைகளைக் கண்டறிவதற்கு மாகாண மட்டத்தில் மதத் தலைவர்கள் தலைமையிலான குழு ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மல்வத்து, அஸ்கிரி மகா நாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.