தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் மாணவர்களின் கற்றலில் ஏற்படுத்தும் தாக்கம்.

tubetamil
0


  ICT தொழிநுட்பம் பாடசாலையின் தொடர்பாடலுக்கு புதியவற்றைஉருவாக்குவதற்கு சேமித்து வைப்பதற்கு,முகாமைத்துவ தகவல்களைப் பெறுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. சிலசந்தர்ப்பங்களில் ICT கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் அடிப்படையாகக் காணப்படுகின்றது.அவ்வாறாக வினைத்திறன் மிக்கதொழிநுட்பத்துடன் கூடிய வெண்பலகை பயன்படுத்தப்படுகின்றன. மாணவர் தமது சொந்த தொலைபேசியிலேயே கற்றல் செயற்பாட்டை மேற்கொள்ளவும் விரிவுரைகளை வீட்டில் இருந்துஅவதானிக்கக் கூடியதாகவும் இடைத்தொடர்புமிக்க செயற்பாடுகளைமேற்கொள்ளக் கூடியதாகவும் காணப்படுகின்றது. 

ஆசிரியர்கள் தொழிநுட்பம் தொடர்பான அறிவைப் பெற்று பயிற்றப்பட்டு இருப்பின் இம்முறைகள் மாணவர்களிடம் உயர்ந்த திறனை ஏற்படுத்துவதுடன் புத்தாக்கம்,தனித்துவம் போன்ற விடயங்களை ஏற்படுத்துகின்றது. மாணவர்கள் புரிந்துணர்வுகளை வெளிப்படுத்துவதாக காணப்படுவதுடன் சமூகத்திற்கும் வேலைத்தளத்திற்கும் தேவையான தொழிநுட்பமாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாககாணப்படும்.

தொழிநுட்ப கலாசாரங்களும் தொழிநுட்ப போதனைகளும் மக்களின் வாழ்க்கைவேலை,விளையாட்டு,கற்றல் கட்டமைப்பு அறிவுப்பகிர்வு போன்றவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் காணப்படுகின்றது,பட்டதாரிகள் எவ்வளவு தூரம் குறைந்ததொழிநுட்ப அறிவைக் கொண்டிருக்கின்றாறோ அதைவிட அதிகமான பிரதிகூலங்களைப் பெற்று தேசியமற்றும் பூகோளமயபொருளாதார பின்னடைவுகளைப் பெறுவார்கள்.

பலநாடுகளில் தொழிநுட்பபோதனைகள் பாடசாலைகளின் ஊடாக வழங்கப்படுகின்றன. பொதுவானகற்றல் பிரயோகங்கள் ICT உள்ளடக்கப்படுகின்றன.

•ஒருமாணவனுக்கு ஒரு மடிக்கணனி

குறைந்த செலவுகளைக் கொண்டு இவ் மடிக்கணனி தயாரிக்கப்படுகின்றது. குறைந்தளவிலான அடிப்படை இயல்புகள் வலுச்சக்கதிகள் விலைபோன்றவற்றைக் கொண்டது. 

•Tablets

இது சிறியகணனி அமைப்பைப் போன்ற தொடுதிரையைக் கொண்டது. விசைப்பலகைககள் மற்றும் Mouse இல்லாமல் உள்ளீடுகளை இயக்கமுடியும். விலை உயர்ந்தபிரயோகங்களை ( Apps) தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.

Smart Boards

வினைத்திறன் மிக்கவகையில் படங்களை காட்சிப்படுத்துவதற்கும் கையாளப்படுவதற்கும் பிரதிசெய்வதற்கும் தெரிவுசெய்வதற்கும் நகர்த்துவதற்கும் அவசியமாகக் காணப்படுகின்றது. கையால் எழுதப்பட்ட குறிப்புக்களைக் கூட சேமித்துவைத்து பயன்படுத்தமுடியும். மாணவர் மையக்கல்வியைகாட்டிலும் வகுப்பு முழுவதற்குமான ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ICT காணப்படின் சாதாரணமாகவே மாணவர்களின் ஈடுபாடு 
வகுப்பறையில் அதிகமாகக் காணப்படும்.

•E-Readers

100ற்கும் மேற்பட்ட புத்தகங்களை டிஜிற்றல் வழியில்   E-Readers தன்னகத்தேகொண்டு காணப்படுகின்றது. அத்தோடு அதிகளவான பகிர்வை வழங்குகின்றது. இணையத்தளத்தில் உள்ள தகவல்களைஉடனடியாக வாசிக்கும் மாணவர்களிற்கும் அல்லது அவ் தகவல்களை சேமித்துவைத்து பின்னர் வாசிக்கும் மாணவர்களிற்கும் E-Readers துணைபுரிகின்றது.

ICT மாணவர்களின் வினைத்திறனை அதிகரிக்கின்றது.உதாரணமாக கடந்தகாலங்களில் மாணவர்கள் ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதிக் கொண்டவற்றையே மாணவர்கள் குறிப்பாக எழுதிக் கொண்டனர். அவற்றையே நினைவுபடுத்திக் கற்கவேண்டியும் இருந்தது. ஆனால் ICT வாயிலாக மாணவர்கள் அதிகளவு கைகளைப் பயன்படுத்தாது தொழிநுட்பசாதனங்கள் மூலம் வகுப்பறையில் கவனம் செலுத்தினர். மாணவர்களிற்கு இலகுவாக தமது உணர்வுகளை அல்லது கருத்துக்களைபகிரமுடியும்.

ஆசிரியர்களினதும் வேலைச்சுமையைக் குறைக்கின்றது. வகுப்பறைக்குத் தயார்செய்தல்,பல்வேறு விதமானகடமைகள் அதாவது பெற்றோருடன் இடைத்தொடர்புகொள்ளல்,மன்றச் செயற்பாடுகள் போன்றவற்றில் ஈடுபடுதல் இவை ஆசிரியர்களிற்கு ஒருசவாலாகவும் சுமையாகவும் காணப்படுகின்றது. ICT இன் அறிமுகமானது நேரம்,முயற்சி போன்றவற்றை வினைத்திறன் மிக்கவகையில் மாற்றியுள்ளது. மாணவர்களின் கற்றல் தரத்தையும் பெறுபேற்றையும் அதிகரிக்கக் கூடியதாகஉள்ளது.

ஆசிரியர் மற்றும் மாணவர்களிமையே தரவுகள் மற்றும் தகவல்களை இலகுவாக பரிமாற்றிக் கொள்ளக்கூடியதாகஉள்ளது. கற்றல் ஒழுங்கமைப்பானது கணனிவாயிலாக இலகுவாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மாற்றக் கொள்ளக் கூடியதாகவுள்ளது. ஆசிரியர்களிற்கிடையிலான தகவல் பரிமாற்றமானது சிறந்த கற்பித்தல் சாதனங்கள் கற்பித்தல் முறைகள்,கற்றல் மேம்பாடு,தரம் தொடர்பாக கற்றக்கூடியதாக இருக்கின்றது. மாணவர்களின் கற்றல் ஆர்வத்தினை தூண்டக்கூடியது. புலவகையான இலத்திரனியல் வகைச் சாதனங்களைக் கையாளக்கூடியதாக உள்ளது.

ICT பாடப் போதனையானது வெறுமனவே ஆசிரியர்களின் செயற்பாடுகளை நம்பியிருக்காது மாணவர்கள் சுயமாக அறிவினைப்டபெற்றுக் கொள்வதற்குதுணைபுரிகின்றது. மாணவர்கள் தமது சுயம்சார்ந்துதிறனைக் கட்டியெழுப்புவதற்குஉதவிபுரிகின்றது. கடந்தகாலங்களில் தொழிநுட்ப அறிவுபோதாமை எதிர்பாராதவிளைவுகளை எட்டியுள்ளது. உதாரணமாக பாதுகாப்புசமூகவலையமைப்புக் கணக்குபோன்றன தொடர்பான பிரச்சனைகள் காணப்பட்டன.

மாணவர்கள் ICT தொடர்பான அடிப்படைத்திறனைக் கொண்டிருப்பதனைஉறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

ICT  ஆசிரியர்களிற்கு தொழில் வாண்மைவிருத்திகாணப்படல் வேண்டும். ஆசிரியர்கள் தொழிநுட்பசிறப்பு அறிவு மற்றும் திறன்களை விருத்திசெய்தல் அவசியமாகும். ஏன்எனில் மாணவர்களுக்கானஒழுங்கமைக்கப்பட்ட கணிப்பீடுகளை வழங்கள் ,தனியான அறிவுறுத்தல்கள்,நிகழ்நிலைவளங்கள் மற்றும் மாணவர்களைஈடுபடுத்தல் மற்றும் இடைத்தொடர்புகளை ஏற்படுத்தல் போன்றவற்றிற்குஆசிரியர்களிற்கான தொழிநுட்பஅறிவு அவசியமாகக் காணப்படுகின்றது.

21ம் நூற்றாண்டுக் கல்விக்கு மாணவர்களிற்கான தொழிநுட்ப அறிவென்பது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. கற்றல் போதனைகளை வழங்கும் ஆசிரியர்களிற்கும் தொழிநுட்பம் தொடர்பான தொழிவாண்மைவிருத்தி இன்றியமையாதது. ஆனால் இலங்கையைப் பொருத்தமட்டில் 55% தொழிநுட்பவசதிகளைக் கொண்டபாடசாலைகள் காணப்படுகின்றன. குறிப்பாக மேல்மாகாணத்தில் 63% மும் வடமத்தியமாகாணத்தில் 43% மும் தொழிநுட்பவளங்கள் காணப்படுகின்றன. இலங்கையின் வளர்ச்சியடைந்த பகுதிகளிலே மாணவர்களிற்கான தொழிநுட்பஅறிவு உயர்வாகக் காணப்படுகின்றது. கிராமப்புறமட்டத்தில் மாணவர்களிற்கான ஈடுபாடு காணப்பட்டபோதும் வளப்பற்றாக்குறை என்பது நிவர்த்தி செய்யமுடியாத பிரச்சனையாகக் காணப்படுகின்றது. எவ்வாறு காணப்படினும் பூகோளமயமாக்கப்பட்ட உலகில் தொழிநுட்ப அறிவு என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

                                                                                                                                      

                                                                                                                       B.Kasthuri

                                                                                                                      4th year 1st semester

                                                                                                   Department of Education and childcare


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top