பாடசாலை மாணவன் வன்புணர்வு: ஆசிரியருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.....

tubetamil
0

 அரச பாடசாலை ஒன்றில் மாணவன் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸில் சரணடைந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நேற்று (07.08.2023) சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பிரதான சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் வழங்கி  உத்தரவிட்டுள்ளார்.

இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள பாடசாலை அதிபரை தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான, இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராகச் செயற்பட்டு வந்துள்ள சந்தேக நபர், கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி விளையாட்டு அறையில் வைத்து மாணவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்ததாக தெரிவித்து, ஆகஸ்ட் 2ஆம் திகதி அந்த மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.



சரணடைந்த  ஆசிரியர்

இந்த நிலையில், தலைமறைவாகி இருந்த சந்தேக நபரான ஆசிரியர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.08.2023) மாலை தனது சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்த நிலையில், சந்தேக நபரை நிந்தவூர் பொலிஸார் நேற்று (07.08.2023) சம்மாந்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட மாணவன் அதிபரிடம் முறையிட்டுள்ளதுடன், இரு வாரங்கள் கழிந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மூடி மறைப்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஊடகங்களுக்குப் பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top