கலப்புக் கற்றல் முறை; மாணவர்களின் கற்றலில் சிறந்த இடைத்தொடர்பு!

tubetamil
0



 
புதிய கற்றல் முறைகளும்  நுட்பங்களும் 21ம் நூற்றாண்டு உலகில் கல்வி கற்கும் மாணவர்களை கற்றலுக்கு தயார்படுத்தலுக்கு அவசியமாகும். அந்த வகையில் கலப்புக் கல்வி முறையானது பாரம்பரிய கற்பித்தல் முறையோடு இணைந்து நிகழ்நிலை கற்றலை குறித்த அதே பாடத்தில் அதே வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவதாகும். அது நேருக்கு நேர் மற்றும் நிகழ்நிலை அனுபவங்களை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும் எனக் குறிப்பிடப்படுகிறது. அதே நேரம் சில வகையான கற்றல்கள் நேருக்கு நேராகவும் மற்றையவை முற்றுமுழுதாக நிகழ்நிலை சார்ந்ததாகவும் காணப்படுகிறது. வேறு வகையில் கூறின் கலப்பு கற்றல் பிரயோகமானது கற்றல் அனுபவத்தினை நேருக்கு நேராகவும், நிகழ்நிலை வாயிலாகவும் பெற்றுக் கொடுப்பதாகும்.

நிகழ்நிலை கற்பித்தலில் மாணவர்கள் நேரடியாக இல்லாமல் தொழிநுட்பம் வாயிலாக இணைகின்றனர். உதாரணமாக கலப்புக் கற்றலில் இணையும் மாணவர் ஒருவர் ஆசிரியர் கூறுவது போன்று பாரம்பரிய வகுப்பில் செயற்படுவதோடு அதே நேரம் நிகழ்நிலை கற்றல் செயற்பாடுகளையும் வகுப்பறைக்கு வெளியே செயற்படுத்திக் கொள்ள முடியும்.

நிகழ்நிலை வகுப்புக்களில் கற்றல் நேரமானது மாற்றியமைக்கக்கூடியதாக காணப்படும். அத்தோடு பல்வேறுபட்ட பட்டங்கள் தொடர்பாக இடைத்தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடிவதோடு தன்னிச்சையாகவும் செயற்படக்கூடியதாக காணப்படும். எவ்வாறாயினும் ஒரு தரமான கலப்புக் கற்றல் முறையானது கல்வி உள்ளடக்கம் மற்றும் செயற்பாடுகள் நேரடி மற்றும் நிகழ்நிலைக் கற்றலில் இணைந்து செயற்பட்டு இடைத்தொடர்பினை பேணக்கூடியதாகக் காணப்பட வேண்டும்.

கலப்புக் கற்றலானது hybrid அல்லது mixed-mode learning எனக்கொள்ளப்படும். இக் கற்றல் முறையானது தொடர்ச்சியான ஒரு செயலாகும். உதாரணமாக சில பாடசாலைகளில் கலப்புக்கற்றல் முறைகளையே வகுப்பறையில் ஆசிரியர்கள் கையாளுகின்றனர். மேலும் மேலதிக அனைத்து செயற்பாடுகளுமே கலப்புக் கற்றல் முறையில் மேற்கொள்வதற்கு முனைப்பாக செயற்படுகின்றனர். வீடியோ பதிவுகள், நேரடி வீடியோ காட்சிகள் போன்றன ஆரம்ப நிலை மாணவர்களின் கற்றலில் சிறந்த இடைத்தொடர்பினை ஏற்படுத்த பயன்படுத்துகின்றன.

சில சந்தர்ப்பங்களில் மாணவர்கள் நிகழ்நிலை வகுப்புக்களில் செயற்றிட்டங்கள், ஒப்படைகள் போன்றவற்றில் தன்னிச்சையாக செயற்பட முடியாது உள்ளது. இதற்காக ஆசிரியர்களோடு நேரடியாக கலந்துரையாட வேண்டிய தேவை காணப்படுகிறது. மாணவர்கள் அதிகமாக பாரம்பரிய கற்பித்தலில் இல்லாமல்  அதிகளவாக நிகழ்நிலை கற்றலில் தன்னிச்சையாக ஈடுபடும் சூழலும் காணப்படுகிறது.

அதிகமான கொள்கை தயாரிப்பாளர்களும், இடைநிலை கல்வியியலாளர்களும் கலப்புக் கற்றல் வினைத்திறன் மிக்கதாக அமையும் எனக் கருதுகின்றனர். இவ் கலப்புக் கற்றல் முறையின் பயன்பாடுகள் எனும் போது,

• தொலைதூரக் கல்வியிலும் இணைந்து செயற்பட சந்தர்ப்பங்கள் காணப்படல்.
• நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கக்கூடியதாக இருத்தல்.
• இடைத்தொடர்புகளை அதிகரித்தல்.
• கற்றலினை மேம்படுத்துதல்.
• நிகழ்நிலை கற்றல் குடிமகனாக்குதல்.

புத்தாக்க மற்றும் வினைத்திறன் மிக்க கலப்புக்கற்றல் சூழலானது மிகச் சரியான தெரிவுகளையும் விளைவுகளையும் ஏற்படும் சவால்களையும் எதிர்கொள்ளக் கூடியதாக இருத்தல்.

• தொழிநுட்ப கையாளுகை
• வடிவமைப்பு
• பாதுகாப்பு மற்றும் அவதானம்
• திறன் விருத்தி, பங்குபற்றல் மற்றும் பயிற்சி
• ஊக்கமளித்தல் போன்றன காணப்படுகின்றன.

கலப்புக் கற்றல் செயற்பாட்டிற்கு ஆசிரியர்களுக்கு போதியளவு பயிற்சிகளை வழங்க வேண்டும். அதாவது முன் செயலமர்வு முன்னாயத்தங்கள், நிகழ்நிலை செயலமர்வுகள், நேரடி செயலமர்வுகள், இணையத்தள வளங்கள் போன்றன தொடர்பான பயிற்சியினை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறாக கலப்புக் கற்றலானது பாடசாலையில் வினைத்திறன் மிக்க விளைவினை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். மாணவர்கள் ஊக்கமான செயற்பாட்டிற்கு ஏற்ற கற்பித்தல் முறையாகக் காணப்பட்டாலும் இங்கு மாணவர்கள் பங்கு அல்லது ஆசிரியர்களின் ஈடுபாடு குறைவாகக் காணப்படும் சந்தர்ப்பத்தில் கற்றல் முறைமை தோல்வி அடைந்து விடும். ஆசிரியர்களுக்கான பயிற்சியும் மாணவர்களின் ஈடுபாடும் இக் கற்றல் முறைமையில் தாக்கம் செலுத்துவதாக காணப்படுகிறது.

                                                                                                                                  R.Piyamala
                                                                                                                               4th year 1st semester
                                                                                                  Department of education and childcare.

 

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top