பௌத்த விகாரை, இந்துக் கோவில் அமைக்க குருந்தூர் மலையில் 03 ஏக்கரை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது

keerthi
0

 




பௌத்த விகாரை, இந்துக் கோவில் மற்றும் மக்கள் பாவனைக்காக குருந்தூர் மலை தொல்லியல் பகுதிக்கு வெளியே மூன்று ஏக்கரை ஒதுக்குவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.


அதாவது உபுல் மகேந்திர ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்ற மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வுக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் போது புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.


குருந்தி ரஜமஹா விகாரை பௌத்த மத இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது அனைத்து இலங்கையர்களுக்கும் சொந்தமானது எனவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறுஇருக்கையில், குறித்த பகுதி குருந்தி தொல்லியல் பகுதிக்கு சொந்தமானது என்பதனால் 229 ஏக்கர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பகுதியை மீள உறுதிப்படுத்த நிபுணர் குழுவொன்று பரிசோதனைகளை மேற்கொள்ள தயாராகி வருவதாகவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.


அந்த இடத்தின் மறு ஆய்வு ஆறு மாதங்களுக்குள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top