மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் ஓட்டமாவடி புகையிரத கடவைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து சம்பவமானது தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறுஇருக்கையில் விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த 13 வயது சிறுமி வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இவ்விபத்துடன் தொடர்புடைய தனியார் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.