தந்தை மற்றும் சகோதரனால் 16வயது சிறுமிக்கு நேர்ந்த சம்பவம்..!

keerthi
0 minute read
0


தந்தை மற்றும் சகோதரன்  சேர்ந்து 16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறுஇருக்கையில்  அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் கூறியுள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி எலுவன்குளம், ஐலியா கிராமத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தாய் இளம் வயதிலேயே உயிரிழந்த நிலையில் தனது தந்தை மற்றும் சகோதரருடன் அவர் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கள புத்தாண்டுக்கு முந்தைய தினத்தில் தனது தந்தையும் சகோதரனும் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் அன்று முதல் அவர்கள் தன்னை பலமுறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் சிறுமி பொலிஸாரிடம்  கூறியுள்ளார்.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் தந்தைக்கு 53 வயது எனவும் சகோதரனுக்கு 14 வயது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வனாத்தவில்லுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top