மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் 18 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு கொழும்பு 8, பேஸ்லைன் வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உந்துருளியொன்றில் வந்த இனந்தெரியாத இருவர், கடந்த முதலாம் திகதி குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
அத்தோடு எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய, 20 வயதுடைய இளைஞர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் அண்மையில் கைது செய்திருந்தனர்.