யாழ்- மல்லாகம் நீதவான் நீதிமன்றின் களஞ்சியத்தில் வைக்கப்பட்ருந்த 50 கிலோகிராம் கஞ்சா காணாமல் போயுள்ளதாக தெல்லிப்பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் நீதவான் நீதிமன்றின் களஞ்சிய அறையின் சான்று பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியினால் இந்த முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.
இவ்வாறுஇருக்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் அண்மையில் கஞ்சா மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் குறித்த கஞ்சா காணாமல் போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பளை காவல் துறையினர் மற்றும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.