பாகிஸ்தானின் - பலோசிஸ்டான் மாகாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 52 பேர் மரணமடைந்துள்ளதாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அப்துல் ரசாக் ஷாகி தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதவிர 130 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பள்ளிவாசல் முன்றலில் மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி ஒன்று ஆரம்பிப்படவிருந்த நிலையில் இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
அத்தோடு ஆரம்ப விசாரணைகளின் மூலம், இது தற்கொலை குண்டு தாக்குதலாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.