காய்ச்சல் என்று கூறி யாழ் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7வயது சிறுமிக்கு இடது கை அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறுஇருக்கையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தாதி உள்ளிட்ட அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக்கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மனு ஒன்றை கையளிப்பதற்காக பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.