92 ஓக்டேன் பெற்றோலை கொள்வனவு செய்ய அனுமதி!

keerthi
0

 


92 ஒக்டேன் பெற்றோல் அடங்கிய 4 கப்பல்களை சிங்கப்பூரின் எரிசக்தி நிறுவனமான விட்டொல் ஏசியாவிடமிருந்து கொள்முதல் பத்திரத்தை குறித்த நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி வரையிலான 4 மாத காலப்பகுதியில், குறித்த பெற்றோல் ஏற்றுமதிகளை கொள்வனவு செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்திற்காக, இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழங்குநர்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தன.


எனினும் அதற்காக நான்கு விலைமனுக்கள் பெறப்பட்டிருந்த நிலையில், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரையின்படி, குறித்த சிங்கப்பூர் நிறுவனத்திற்கு உரிய கொள்முதல் வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top